Songs List
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
1. கர்த்தருக்கு பயப்படும் பெரியோரையும்
கர்த்தருக்கு பயப்படும் சிரியோரையும்
சம்பூரணமாக ஆசீர்வதிப்பார் பரிபூரணமாக ஆசீர்வதிப்பார்
2. இஸ்ரவேலே கர்த்தரை நம்பி விடு
ஆரோன் குடும்பமே நம்பி விடு
துணையாய் நின்று ஆசீர்வதிப்பார்
கேடகமாகவே ஆசீர்வதிப்பார்
3. கிறிஸ்து இயேசுவுக்குள் இயேசுவுக்குள்
உன்னதங்களில் ஆசீர்வாதமே
மகிமையின் நம்பிக்கையாய் இருக்கிறார்
மகிமையின் ஐசுவரியத்தால் நிரப்பிடுவார்
4. சுகவாழ்வு சீக்கிரம் துளிர்த்திடுமே
சுகமாய் தங்கி இருப்போமே
சௌக்கியம் ஆரோக்கியம் வரப்பண்ணுவார்
பாக்கியம் நன்மை பெருக செய்வார்
5. வானம் பூமிக்கு உயர்ந்தது போல
ஆண்டவர் நினைவும் பெரிதல்லவோ
எல்லைகளை பெரிதாக்குவார்
தொல்லைகளை நீக்கிடுவார்
விடுதலை விடுதலை
விடுதலை (2)
இன்றே உனக்கு விடுதலை
விடுதலை (2)
இரட்டிப்பான நன்மை விடுதலை
1.இயேசுவின் நாமத்தில் இருவர் மூவர்
கூடும் இடத்தில் வந்து நிற்கிறார்
2.இரட்சகர் அருகே வந்து நிற்கிறார்
உன் தாகம் தீர்க்க வந்து நிற்கிறார்
3.நித்திய மீட்பர் வந்து நிற்கிறார்
நிம்மதி தரவே வந்து நிற்கிறார்
4.கர்ததர் இயேசு வந்து நிற்கிறார்
கண்ணீர் துடைக்கவே வந்து நிற்கிறார்
5.அற்புதர் இயேசு வந்து நிற்கிறார்
அற்புத அடையாளம் செய்கின்றார்
6.பெரிய மேய்ப்பன் வந்து நிற்கிறார்
பெரும் அரும் காரியம் செய்கின்றார்
7.பரிசுத்தர் உன் அருகே வந்து நிற்கிறார்
பரிசுத்தம் ஆக்கவே வந்து நிற்கிறார்
8.சர்வ வல்லவர் வந்து நிற்கிறார்
சகலமும் தடையின்றி செய்திடுவார்
9.அபிஷேக நாதர் வந்து நிற்கிறார்
கட்டுகள் கண்ணிகள் அறுத்திடுவார்
10.மகிமையின் கர்த்தர் வந்து நிற்கிறார்
மகிமை மேல் மகிமை அடையச்செய்வார்
11.சத்துவம் பெருகச்செய்பவரே
பலவீனம் நீக்கவே வந்து நிற்கிறார்
உன் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும்
உன் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும்
பூக்கும் மலரும்செழிக்கும்
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
ஓடி சுகம் அடைவாய் -(2)
யேகோவாராபா சுகம் தருவார்
சவுக்கியம் ஆரோக்கியம் வரப்பண்ணுவார்
1)வனாந்தரம் செழிக்கும்
கடுவெளி களிக்கும்
புஷ்பம் போல பூக்கும்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடும்
2)வெண்கல கதவு தகர்ந்து நொறுங்கும்
இருப்பு தாழ்ப்பாள் முறியும்
அந்தகார பொக்கிஷம் கிடைக்கும்
ஒளிப்பிட்ப் புதையல் கிடைக்கும்
3)அலங்கத்திற்குள்ளே சமாதானம்
அரண்மனைக்குள்ளே சுகம்
கர்த்தரின் ஆலய ஐக்கியமோ
எத்தனை மகிழ்ச்சி சுகம்
4)வாழ்ந்து சுகமாகவே இருப்பாய்
ஆத்துமா வாழ்வது போல
கர்த்தரை தேடும் இதயம் மகிழும்
கர்த்தரின் நாமம் புகழும்
5)காண்டா மிருக்க் கொம்பைப்போல
ஆண்டவர் உயர்த்திடுவார்
நுகங்கள் முறியும் கட்டுகள் அவிழும்
புதுப்புது அபிஷேகம் பெறுவாய்
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை
தேவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
தேவனால் இயலாத காரியம் ஒன்றுமில்லை
ஒன்றும் இல்லை என்றும் இல்லை
எங்கும் இல்லை இல்லை (3)
1. விசுவாசித்தால் நீ மகிமை கண்டிடுவாய்
விசுவாசிப்போனுக்கு எல்லாம் கூடிடுமே
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகதே
2. ஞானிகள் வெட்கப்பட உன்னை தெரிந்துகொண்டார்
பலவான்கள் வெட்கப்பட உன்னை தெரிந்து கொண்டார்
உள்ளவைகளை அவமாக்க
எளியோன் உன்னை தெரிந்து கொண்டார்
3. இதோ போரடிக்க புதிதும் கூர்மையுமாம்
பற்கள் எந்திரமாய் உன்னை மாற்றிடுவார்
யாக்கோபு சிறுபூச்சியே கர்த்தர் உன் துணையே
4. பரலோகத்தின் தேவனானவர் காரியம் கைகூடி
வாய்க்கச் செய்திடுவார்
எழும்பிடுவோம் கட்டிடுவோம் எழும்பி பிரகாசிப்போம்
5. நம்மால் ஏதும் ஆகும் என்று யோசிக்க
நம்மில் தகுதி ஒன்றும் இல்லை இல்லை
இயேசுவன்றி நம்மாலே ஒன்றும் செய்யவே முடியாதே
6. விரும்பினாலும் அல்ல ஓடினாலும் அல்ல
இரங்கும் தேவனாலே நிச்சயம் நடந்திடுமே
கர்த்தரின் ஆவியினாலே எல்லாம் ஆகிடுமே
நன்மையாய் தீமைகளை மாற்றுவீரே
நன்மையாய் தீமைகளை மாற்றுவீரே
நன்மையாய் யாவும்முடிய செய்வீரே
கரத்தர் நல்லவர் கர்த்தர் வல்லவர்
கர்தத்தர் கிருபை என்றுமுள்ளதே
பல்லவி
கரத்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
நான் தாழ்ச்சியடையேன்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
அனுதினம் நடத்துவாரே
2.நன்மைகளை குறைவின்றி தருவீரே
நன்மையும் கிருபையும் என்னை தொடருமே்
கர்த்தர் வெளிச்சம் கர்த்தர் கோட்டை
பயமின்றி வாழ்வேனே
3.சகலமும் நன்மைக்காய் நடந்திடுமே
சகலமும் செய்ய வல்லவரே
கர்த்தர் செய்ய நினைத்ததெல்லாம்
அனுதினம் தடைபடாதே
4.நன்மை ஈவு பூரண வரங்களும்
பரத்தில் இருந்து வந்திடுதே
நன்மை செய்து சுற்றி மகிழ்வோம்
நல்ல ஆவி அபிஷேகத்தால்
5.நன்மையானதை கர்த்தர் தருவீரே
நம் தேசம் தன் பலன்தந்திடுமே
கர்த்தர ஜனங்கள் கர்த்தர் நன்மையால்
திருப்தி அடைவாரே
